2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

காணிப் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமை கோருவதாகவும் எனவே, அந்த காணியை மீட்டுத்தருமாறு கோரி பெண் ஒருவர், இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போத, குறித்த பெண் கருத்து தெரிவித்த போது, தனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில்குளத்தில் நான்கு பரப்பு காணி கடந்த 2006ஆம் ஆண்டு  எழுத்துமூலமாக வழங்கப்பட்டது. தற்போது தனது கணவன் இறந்த நிலையில்,  அந்தக் காணியினை மீண்டும் அவர் உரிமை கோருவதுடன், 2010ஆம் ஆண்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் வீட்டையும் அமைத்துள்ளார்.

எனவே கணவன் இறந்தநிலையில் தனக்கு கிடைக்கவேண்டிய காணியினை பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை முன்வைத்ததுடன், தீக்குளிக்கபோவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, பதாதை ஒன்றை ஏந்திய படி பை ஒன்றில் மண்ணெண்ணை போத்தலையும் அவர் வைத்திருந்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அவருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தியதுடன், அவர் வைத்திருந்த மண்ணெண்ணை போத்தலை மீட்டதுடன், அவரை பிரதேச செயலாளரிடம் அழைத்துச் சென்றனர்.

குறித்த காணி 1981ஆம் ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார். 

இது தொடர்பாக சம்பந்தபட்ட மற்றைய தரப்புடனும் கலந்துரையாடி இதற்கான தீர்வை பரிசீலிக்கலாமென, அப்பெண்ணிடம் பொலிஸார் உறிதியளித்த பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .