2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

காணியை விற்றவரிடம் பணம் கொள்ளை

Janu   / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணியை விற்று பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையிடமிருந்து  1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், I iPhone 14   PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதாக கோப்பாய்  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெளிநாட்டு பிரஜை சேந்தாங்குளம் பகுதியில் உள்ள காணியை விற்று தனது  வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .