2025 மே 05, திங்கட்கிழமை

காரைநகரில் ஒரு பகுதியை முடக்க தீர்மானம்

Niroshini   / 2021 மே 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

காரைநகரில் உள்ள ஒரு கிராமத்தை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி,  கொரோனா தடுப்பு மத்திய நிலையத்துக்கு  விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவின்  சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில், அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே, அந்தப் பகுதியை முடக்குவதற்கான விண்ணப்பத்தை, யாழ். மாவட்டச் செயலாளருக்கு சுகாதாரப் பிரிவினர்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விண்ணப்பம்  மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர்கால நிவாரண உதவி வழங்கப்படவுள்ளதாகவும், யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X