Freelancer / 2023 மார்ச் 05 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளிலுள்ள கால்நடைகளில் பெரியம்மை (இலம்பி) நோயின் தாக்கம் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, இள வயதுடைய கன்றுகள் இவ்வாறு அதிக நோய் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன என கால் நடைப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை பெரும் புண்ணாக மாறுவதுடன், அதனால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்ற நிலமை காணப்படுவதாகவும் பால் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படுவதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் இது தோடர்பில் தெரிவிக்கையில்,
“இந்த நோய், ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக, நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இலகுவில் பரவக்கூடியதாகும். 2020ஆம் ஆண்டிலும் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டு, பூரண கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
“தமது பகுதி கால்நடை போதானாசிரியர்கள் அல்லது கால்நடை வைத்தியர்களை தொடர்புகொண்டு இந்நோய்க்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு, பண்ணையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றை பராமரிப்பதன் மூலம் இந்த நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என்றார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் இந்நோயின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதாக வட மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றன. (N)
56 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago