2025 மே 14, புதன்கிழமை

கிளிநொச்சியில் நவீன சந்தை; பிரதமரால் சனியன்று அடிக்கல் நாட்டப்படும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஜூலை 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்களதும் பொதுமக்களதும் நீண்டகால எதிர்ப்பார்ப்புக்கமைய, நவீனத்துவமான சந்தையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

765 மில்லியன் ரூபாய் செலவில்? முற்றிலும் நவீனத்துவமிக்க சந்தையாக அமைக்கப்படவுள்ள இந்தச் சந்தைக் கட்டடத்துக்கான அடிக்கல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று நாட்டப்படவுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொதுச்சந்தையாக அமையவுள்ள இந்த சந்தை தொடர்பான கூட்டமொன்று, மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (17) நடைபெற்றது.

இதன்போதே, இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர மையத்தில் அமையவுள்ள  முதலாவது வர்த்தக மையக்கட்டடமாகவும் இது காணப்படுமென, இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நகரமையம் அமைப்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனால், நாடாளுமன்ற ஒத்திவைப்புவேளைப் பிரேரணையும் கொண்டுவரப்பட்டிருந்தது.

முதலில் இந்தக் கட்டடடத்துக்கு 80 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதி, முற்றிலும் நவீனத்துமிக்க சந்தையாக அமைவதற்குப் போதாதென, ஸ்ரீதரன் எம்.பியினால் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, குறித்த நிதியைஇபன்னங்கட்டி கிராம வீட்டுத்திட்டம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், குறித்த கட்டடம் அமைப்பதற்கு, தற்போது 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தைக் கட்டடம் அமையவுள்ள இடத்தை, மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், நகர அபிவருத்தி சபையின் உத்தியோகத்தர் ஆகியோர், நேரில் சென்றுப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .