Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதை நிறுத்துமாறு, கோண்டாவில் பனை - தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்துக்கு வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.
அத்தடன், பொது மக்கள் குடியிருப்பு பகுதியிலுள்ள குறித்த மதுபான நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும், ஆணையாளர் பொ.வாகீசன் சங்கத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொன்னையா வீதி - கொக்குவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பனை, தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் 31ஆம் இலக்க சங்கக் கிளையானது (தவறணை), பொது மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளதாகவும் இதனால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல தரப்பினர்களுக்கும் மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கமைய, குறித்த மதுபான விற்பனை நிலையத்தை அகற்றுமாறு, வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தால், கோண்டாவில் பனை -தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, நல்லூர் பிரதேச செயலகத்தால் குறித்த நிலையத்துக்குரிய 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரி அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கு முன்னர், அந்நிலையத்தை வேறோர் இடத்துக்கு இடமாற்றம் செய்வது தொடர்பிலும் அதற்காக தெரிவு செய்யப்பட்ட இடம் தொடர்பிலும் தமக்கு அறிக்கையிடுமாறு, ஆணையாளர் பொ.வாகீசன் அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு பொருத்தமான வேறோர் இடத்தைத் தெரிவு செய்யாத பட்சத்தில், 2020ஆம் ஆண்டுக்குரிய வரி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாதெனவும், ஆணையாளர் பொ.வாகீசன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago