எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது.
அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம்.
நாடாளுமன்றில் ஒத்திவைத்த பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களே தெரியாது.
நாடாளுமன்றில் இந்த பிரச்சனை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயாதீன தமிழீழம் மலரவேண்டுமா? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதுக்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago