Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே, குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைப் பொலிஸார் திட்டி வருவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் குறிப்பிட்டார்.
காங்கேசன்துறையிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றனவெனவும் அதிலும் கஞ்சா கடத்தல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றனவெனவும் குறிப்பிட்டார்.
ஆகவே இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளனவெனத் தெரிவித்த அவர், இதற்கமையவே பொலிஸாரால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் திட்டப்பட்டு பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் பதிவுகள் கோப்பாய், அச்சுவேலி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் குடும்ப விவரங்கள் திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
ஆகவே, இப்பதிவுகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் பொது மக்களது பாதுகாப்புக்காகவே இந்தப் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றனவெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, ஜனாதிபதியின் பாதுகாப்புக்காகவே, இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகிய தகவல்களை, அவர் இதன்போது நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago