2025 மே 05, திங்கட்கிழமை

குடும்பஸ்தர் ஓட ஓட வெட்டிக்கொலை

Freelancer   / 2023 ஜனவரி 22 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தியில்  நேற்றிரவு ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் - இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குறித்த நபரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X