2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’குருநகர் மீன்பிடி துறைமுகம் புனரமைத்து கொடுக்கப்படும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மத்திய அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குருநகர் மீன்பிடி துறைமுகத்தின் புனரமைப்புக்கான நிதி ஒதுக்கப்பட்டபோதும், அது பின்னர் காணாமல்போயுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், குருநகர் மீன்பிடி துறைமுகம் புனரமைத்து கொடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, மாநகர முதல்வர் மேற்கண்டாவறு சுட்டிக்காட்டினார்.

அதவாது, மத்திய அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டு பாதீட்டில் அப்போதைய நிதி அமைச்சரினால், குருநகர் மீன்பிடி துறைமுகத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பின்னர் அந்த நிதி காணாமல்போயுள்ளது. என்றார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், குருநகர் மீன்பிடி துறைமுகத்தை விசேட செயற்றிட்டமாக எடுத்துக் கொண்டு புனரமைத்து தருவதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து மாநகர முதல்வர் கூறுகையில்,

கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான கரையோர பகுதிகளில் மக்கள் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை. 1977ஆம் ஆண்டு கடலை நிரவி இந்த மக்களுக்குரிய குடியிருப்புக்களை அமைக்க சகல திட்டங்களும் இடப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் அதனையும் கவனத்தில் எடுத்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு 1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட திட்டத்தின் படி ஒரு மாடி அல்லது இரு மாடி குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இந்த விடயம் தொடர்பாக பேசி, உத்தேச மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வழங்குமாறு கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X