Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளை கைதுசெய்ய ஆதரவை வழங்குமாறு, வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென, அரசியல்வாதிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, குடாநாட்டில் அதிகளவில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், இன்று (11) காலை பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அந்த துண்டுப்பிரசுரத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகன தொடரணியாக பல இடங்களுக்கும் சென்று, இத்துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.
அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்ய உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் 076-6093030 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும், குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
32 minute ago
33 minute ago