2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கேப்பாப்புலவுக்கு பஸ் சேவைகள் வேண்டும்

Freelancer   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லக் கூடிய வகையில் பஸ் சேவைகள் நடத்தப்பட வேண்டுமென பெற்றோர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இக்கிராமத்தில் ஆரம்ப பாடசாலை காணப்படுகின்றது. ஆனால், இடைநிலை, உயர்தர வகுப்புகளுக்கு 100 வரையான மாணவர்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயம், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி என்பவற்றிற்கு சென்று வர வேண்டியுள்ளது. 

இவ்வாறான நிலையில் பாடசாலை நேரத்தில் பஸ் சேவைகள் இடம்பெறாததனால் மாணவர்கள் நடந்து சென்று சென்று வர வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.  

முல்லைத்தீவில் இருந்து இலங்கை போக்குவரத்து பஸ் சேவை மாணவர்களின் போக்குவரத்து நேரத்தில் சேவையில் ஈடுபடுமானால் கேப்பாப்புலவு மாணவர்கள் இரு பாடசாலைகளுக்கும் சென்று வரக் கூடிய நிலைமை ஏற்படும்.  

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேப்பாப்புலவு கிராமத்திற்கான பேருந்து சேவைகள் ஒழுங்காக இடம்பெறவில்லை. 

கேப்பாப்புலவிற்கான பேருந்து சேவைகள் இடம் பெறுமானால் கேப்பாப்புலவு, வற்றாப்பளை ஆகிய கிராம மாணவர்கள், மக்கள் போக்குவரத்து நன்மையடைவார்கள். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளை எடுக்க வேண்டும். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X