2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொக்குவில் பகுதிகளில் சோதனை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பொலிஸ் அணியினர் தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (09) அதிகாலை முதல் விசேட பொலிஸ் அணியினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழில். அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தலைமறைவாக உள்ளனர் என இரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து குறித்த தேடுதல் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல், குறித்த பகுதியில் இனம் காணப்பட்ட வீடுகளிலேயே தேடுதல்களை மேற்கொண்டதாகவும், வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்களின் பொதிகளை சோதனையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் எவையும் கைப்பற்றப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு ஒரு மணித்தியால இடைவெளியில் நான்கு இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்டது.

குறித்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கடந்த இரு நாட்களாக கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X