2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொரோனாவால் தம்பதியினர் பலி

Niroshini   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

சாவகச்சேரி - நுணாவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர், கொரோனோ தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதான மனைவி, கடந்த வாரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (06),  மின்தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 97 வயதுடைய அவரது கணவர், இன்று (06) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X