Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்குகன்
கொரோனா வைரஸ் தோற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தயாராக இருப்பதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இந்தத் தொற்று தொடர்பில் மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று என அடையாளப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து வைத்திய அதிகாரிகளுடனான கூட்டமொன்றை, அண்மையில் நடத்தியதாகவும், அவர் தெரிவித்தார்.
“இந்தக் கூட்டத்தின் போது, சிகிச்சை பெற வந்திருப்பவர் மேற்படி வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என சந்தேகம் ஏற்படின், அவரை வைத்தியசாலையில் உள்ள இரு வைத்திய நிபுணர்கள் பரிசோதிப்பர்கள். இந்தப் பரிசோதனையின் போது, சந்தேகம் வலுப்பெறுமாயின் ஏனைய வைத்திய நிபுணர்களுடன் பேசியதன் பின்னரே, வைத்தியசாலைப் பணிப்பாளரால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என்ற சந்தேகத்தை வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது” எனவும், சத்தியமூர்த்தி கூறினார்.
41 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
6 hours ago