2025 மே 17, சனிக்கிழமை

கொள்ளை; சந்தேகநபர்களுக்கு மறியல்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

திருமண விழாவின் காணொலிப் பதிவை காண்பித்து, மணமகளின் தாலி உட்பட 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்த மூவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்றம், நேற்று (31) உத்தரவிட்டது.

ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று, அதிகாலை அதிகாலை 1.30 மணியளவில், நவாலி தெற்கு, கொத்துக்கட்டி வீதியில் உள்ள வீடொன்றுக்கு புகுந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலொன்று, வீட்டில் இருந்த நபரொருவரைக் கட்டிவைத்துவிட்டு, நடைபெற்ற திருமண நிகழ்வின் காணொலிப்பதிவை காண்பித்து, அதில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை தருமாறு கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது.

அத்தடன், கும்பலின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாத நபர் ஒருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய அக்கொள்ளைக் கும்பல், மணமகளின் தாலி உட்பட அங்கிருந்த பெண்கள் அணிந்திருந்த 60 பவுணுக்கும் மேற்பட்ட தங்க நகைகளும் அவ்வீட்டுக்கு வந்திருந்த வௌிநாட்டவர்களின் கடவுச் சீட்டுகளையும் கைப்பைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நாகேஸ்வரன் என்பவருடைய சகாக்களான சங்கானை, கட்டுடை, நவாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (31) ஆஜர்படுத்தப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .