2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கோப்பாயில் வெடிப்பு: இருவர் படுகாயம்

Editorial   / 2022 நவம்பர் 13 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.றொசாந்த் , நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரமதானத்தின் போது மர்ம பொருளொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். 

கோப்பாய் - கைதடி வீதி ஓரங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து மரம் நடும் செயற்றிட்டத்தை நீர்வேலி பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு இருந்தனர். 

அதன் போது மர்ம பொருளொன்று வெடித்ததில் சிரமதான பணியில் ஈடுபட்டு இருந்த இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X