2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கோரப்படும் தகவல்களை வழங்க இழுத்தடிக்கும் நகரசபை

க. அகரன்   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரசபையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களுக்கு உரிய காலப்பகுதியில் பதில் வழங்கப்படுவதில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் மற்றும் நகரசபைக்குட்பட்ட சில விடயங்கள் தொடர்பில், தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கிய போதும், நகசபையினர் அவற்றுக்குரிய பதில்களை உரிய காலப் பகுதிக்குள் வழங்காது, கால இழுத்தடிப்புக்களை செய்து வருவதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகரசபையிடம் கோரிய விடயங்களுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லைனெ, அண்மையில் நடைபெற்ற சபை அமர்வில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .