2025 மே 14, புதன்கிழமை

கோரோனா; ‘பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை’

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  கோரோனா வைரஸ்  தாக்கத்துக்குட்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், நேற்றைய தினம், வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குட்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாரெனவும் கூறினார்.

இவரது இரத்த மாதிரிகள் மற்றும் வைரஸ் சோதனைக்குரிய பல மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் அறிக்கைகள் கிடைக்கும் வரை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .