Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
சிறைச்சாலையில் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
புங்குடுதீவி மாணவி கொலை வழக்கு திங்கட்கிழமை (09) நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா என நீதவான் கோரியபோதே, சந்தேகநபர்கள் இவ்வாறு கூறினர். அடுத்த அமர்வில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நீதவான் பதிலளித்தார்.
அத்துடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
31 minute ago