2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

காதலிப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த இளைஞனை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.

துன்னாலை குடவத்தையைச் சேர்ந்த குறித்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி, 20 வயதுடைய இளைஞனே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். 

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாருக்கு சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து, சந்தேகநபரான இளைஞனை 18ஆம் திகதி இரவு நெல்லியடிப் பொலிஸார் கைது செய்தனர்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய பொலிஸார், அறிக்கையுடன் சந்தேகநபரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X