2025 ஜூலை 30, புதன்கிழமை

சிறுவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அருமைக்குட்டி குளத்திலிருந்து சிறுவர்கள் இருவரின் சடலங்களை ஊர்காவற்துறை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை நாராந்தனை பகுதியைச் சேரந்த் ஒன்றுவிட்ட சகோதரர்களான டெனிஸ்கரன் தனுசன் (வயது 11), சுரேஷ்குமார் விதுஷன் (வயது 8) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

மேற்படி இருவரும் ஞாயிற்றுக்கிழமை(20), கால்ப்பந்தாட்டம் பார்க்க போவதாக கூறிவிட்டு குளத்தில் குளிக்கச் சென்றுள்ளதுடன் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இருவரது சடலங்களும் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .