Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
முன்னாள் உப சபாநாயகரும் நல்லூர், உடுப்பிட்டி தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மு.சிவசிதம்பரத்தின் முழு உருவச் சிலையானது, சுமார் 3 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது.
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் பணிக்கான சிலையை, சிற்பாசிரியர் ரமணி செய்து வருகின்றார். இந்த சிலை, பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில், நெல்லியடி பஸ் நிலையத்துக்கு அருகில் நிறுவப்படவுள்ளது. இதற்கான இடவசதியை கரவெட்டி பிரதேச சபை ஏற்படுத்திக் கொடுத்ததையடுத்து, சிலைக்கான பீடம் அமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.
விரைவில் இந்தச் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்படும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago