2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சகோதரிகள் இருவர் உடல்கருகி பலி

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சகோதரிகளான 72 மற்றும் 74 வயதான இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா என  காணப்பட்டுள்ளனர்.
  
குறித்த சகோதரிகளில் ஒருவர் திருமணமானவர் எனவும் அவரது கணவரும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், மற்றவர் திருமணமாகாத நிலையில், இருவரும் தனிமையில் வாழ்ந்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டின் பின்புறம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X