2025 ஜூலை 16, புதன்கிழமை

சங்குப்பிட்டிக்குச் செல்லோருக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஆழமான கடல் என்பதன் காரணமாக, இப்பகுதிக்கு வருகை தருபவர்கள் கடலில் குளிப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலா மையமாக சங்குப்பிட்டிப் பாலப்பகுதி வளர்ந்து வரும் நிலையில், ஏ-32 வழியான போக்குவரத்தும் நடைபெறுகின்றபோது, விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே, புகைப்படம் எடுப்பவர்கள் வீதி ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் வாகனங்கள் வரும்போது வீதியைக் கவனிக்காமல், வீதியைக் கடக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் சிறுவர்களின் நடமாட்டம் தொடர்பாக பெரியவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புகைப்படம் பிடிப்போரினால் கூடுதலான விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதன் காரணமாக, இப்பகுதியில் நடமாடும் வீதிப்போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறும், பொதுஅமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .