Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என்று தான், உண்மையில் தாங்கள் நினைக்கின்றோம். அவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே நாங்கள் விரைவில் பெயரிடுவோம் என, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர வல்வெட்டித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரை நாங்கள் விரைவில் பெயரிடுவோம். ஆனால் உண்மையில், எங்களுக்கு பல தரப்பட்ட கருத்துகள், எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் அவ்வாறு பெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தான் என்று நாங்கள் உண்மையில் நினைக்கின்றோம்.
ஆயினும், அப்படியாக ஒரு தீர்மானத்தை இதுவரையில் எடுக்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியது நாடாளுமன்றக் குழுவும் செயற்குழுவுமே தான். அதனடிப்படையில் நாடாளுமன்றக் குழுவும் மற்றும் செயற்குழுவும் கூடி அங்கு பெரும்பான்மையானவர்கள் என்னத்தைச் சொல்கின்றனரோ அதனைத் தான் கட்சி செய்யும் என, மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025