2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘சட்டத்தரணிகள் குழாம் ஒன்றினை உருவாக்க வேண்டும்’

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதிகள் விடயத்தில் உள்ள சட்டரீதியான பிரச்சனைகளை கையாள சட்டத்தரணிகள் குழாம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என பலராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அக்கலந்துரையாடலில், அரசியல் கைதிகளின் வழக்குகள் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் போது முன்னிலையாவதுக்கு சட்டத்தரணிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவிகள் வழங்க வேண்டிய தேவையுள்ளது.

அதனால் சட்டத்தரணிகளை ஒன்றிணைத்து சட்டவாளர்கள் குழாம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் முன் வைக்கப்பட்டது.

அதன் போது நாம் அரசியல் கைதிகளின் விடுதலையை சட்ட பிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்குமாறும் அவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

அதனால் நாம் தற்போது சட்டத்தரணிகள் குழாமை ஒருங்கமைப்பது சாத்தியமாகாது. ஆனாலும் அதனை பிறிதொரு செயற்திட்டமாக முன்னெடுப்போம் என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .