Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா, என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை, இன்று (24) முதல், பொலிஸார், விசேட அதிரடைப்படையினர் ஆகியோரின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, குறிப்பாக சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுக் குழுக்களின் அட்டகாசம், வழிப்பறி போன்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் நிறைவில், சட்டவிரோதச் செயல்களை, பொலிஸாருக்குத் தெரிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
41 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
57 minute ago
1 hours ago