2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கச்சாய் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற பெண் ஒருவரின் கூடையில் இருந்து கைபையை அபகரித்து அதற்குள் இருந்த 3,500 ரூபாய் பணம், மற்றும் ½பவுண் நகையினை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவரையும் முறைப்பாட்டாளர், வெள்ளிக்கிழமை (29) அடையாளம் காட்டினார் என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் முறைப்பாட்டாளர், இருவரையும் அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக சந்தே நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X