2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

சந்தித்த ஹனா சிங்கர் - மணிவண்ணன்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி. விஜித்தா

யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் வி. மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.த. ஜெயசீலனும் கலந்துகொண்டார்.

இதன்போது, “தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத்தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன.

இந்திய அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் மண்டபம் அமைப்பதற்கு முன்னர் இலங்கை அரசாங்கமும் இந்தியா அரசாங்மும் கலாச்சார மண்டபத்தை அமைத்து அதனை யமாநகர சபையிடம் கையளிப்பது என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இக்கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர் தற்போது இது மாநகர சபைக்குத் தரமுடியாது மத்திய அரசாங்கத்திடம் தரவேண்டும் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” என்று சிங்கரிடம் மணிவண்ணன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .