2025 மே 15, வியாழக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்ணான்டோ ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, யாழ்ப்பாணத்திலுள்ள ஆயர் இல்லத்தில், நேற்று (01) நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தியூடாக தமிழ் மக்களுடைய அனைத்தையும் பெற முடியும் எனும் அடிப்படையில், யாழ் மாவட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எனும் வகையில்  ஆயருக்கும் அவருடைய குழுவுக்கும் தன்னுடைய ஆதரவை முழுமையாக வழங்கப்போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .