Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய, மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புகள் இடம்பெற வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றால்தான், அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது தமக்குத் தெரியவருமெனவும் கூறினார்.
அத்துடன், தமது கோரிக்கைகளை சிங்கள மக்கள் மத்தியில் தெரிவித்து, தமது கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய ஒருவரையே ஆதரிப்போமெனவும், அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (12) நடைற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கோட்டாபய எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளாரென்பது, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் சந்தித்தப் பின்னரே தெரியவந்ததாகவும் இல்லாவிடின் தெரியவர வாய்ப்பு இல்லையெனவும் கூறினார்.
எல்லாருடனும் கலந்துரையாடுவதே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தற்போதுள்ள நிலைப்பாடெனத் தெரிவித்த அவர்,
அனைருடனும் கலந்துரையாடியப் பின்னரே, பேரம் பேசும் நிலைப்பாட்டுக்கு வருவோமெனவும் கூறினார்.
பட்டறிவின் அடிப்படையில், சிங்கள மக்களுக்கு செய்யப் போவதை சொல்லி, அதனூடாக தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரக்கூடிய வகையிலான பேச்சுவார்த்தைக்கே தாம் செல்லவுள்ளதாகவும், அவர் கூறினார்.
தற்போதைய நிலையில், கோட்டாபயவை ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்ற பேச்சுக்கு இடமில்லையெனத் தெரிவித்த அவர், யார் கூடுதலாக தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்கள், யார் தமது கோரிக்கைகளை ஆதரிப்பார்கள், அந்த ஆதரிப்புகளை யார் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள், என்பதை பரிசீலித்துதான் முடிவுகள் எடுக்கப்படுமெனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago