Freelancer / 2023 மார்ச் 01 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - முள்ளியவளை சந்தையில் கடைத் தொகுதிகளுக்கான கட்டிட ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருவதாக கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக வங்கியின் 22.5 மில்லியன் நிதி உதவியில் இக்கடைத் தொகுதி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
“கடந்த ஆண்டின் 09ஆம் மாதத்தில் இவ்வேலைகள் தொடங்கப்பட்டன.
“1951ஆம் ஆண்டு முள்ளியவளைச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. கடைத் தொகுதி வேலைகள் தொடங்கப்பட்ட போது, தனிநபர் ஒருவர் முல்லைத்தீவு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
“எனினும், எமது பிரதேச சபை கடைத் தொகுதி வேலைகளை மேற்கொள்ளலாம் என தீர்ப்பு வெளியாகி இருந்தது. தற்போது கடைத் தொகுதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, வேலைகள் நடைபெறுகின்றன.
“இக்கடைத் தொகுதிகள் இயங்கும் போது, முள்ளியவளை சந்தைச் சூழல் ஒரு உப நகரத்துக்குரிய வளர்ச்சி அடையும். மக்கள் பெரும் பயனடைவார்கள்” என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். (N)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago