2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள்

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

சபாநாயகர் கரு ஜயசூரியவை ஆதரித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள் ‘எமக்கும் பெருமை நாட்டுக்கும் பெருமை’ எனது தலைப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளுக்கமைய நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றியுள்ள சபாநாயகருக்கு நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .