Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
“சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அவற்றைப் பற்றி புரிந்து தெரிந்து உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் பேசவில்லை. அவற்றைப் பற்றி யாரும் எங்களுக்கு போதிக்கத் தேவையில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், அடைக்கலநாதனுக்கு சமஷ்டி பற்றிய அறிவு இருக்கின்றதா எனத் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டிருக்கும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலையே சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த 1985ஆம் ஆண்டு தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழர் பிரதிநிதிகள் எல்லோரும் ஐக்கியப்பட்டு திம்புவில் முன்வைத்த சமயம் அந்த திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு காத்திரமாகப் பங்களித்தவன் நான். அதே போன்று முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெற்று அந்த முயற்சிகளிலும் உரிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றேன்.
மேலும், இப்போதும் கூட புதிய அரமைப்பு உருவாக்க முயற்சிகளில் முக்கிய உப குழு ஒன்றின் தலைவராகவும் இருக்கின்றேன். 1972ஆம் ஆண்டில் அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழர் சார்பில் எனது தந்தையார் தர்மலிங்கம் எம்.பி இன்றைக்கு பலராலும் சிலாகித்துப் பேசப்படும் சமஷ்டி பிரேரனை ஒன்றை - யோசனையொன்றை முன்வைத்தார். அவரின் வழியில் வந்த நான் தந்தை செல்வாவுடனும் தளபதி அமிர்தலிங்கத்துடனும் நெருங்கிப் பழகி அரசியல் படித்தவன்.
எனவே தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் தொடர்பில் தெளிவான பார்வையும் அறிவும் எமக்கு உண்டு. ஆனால் நான் சட்டத்தரணி அல்ல என்பது உண்மை தான். ஆனால், சமஷ்டி குறித்தும் ஒற்றையாட்சி முறைமை குறித்தும் போதிய அரசியல் அறிவு ஞானம் உண்டு. அதனை யாரிடமும் கேட்டுப் படிக்கத்தேவையில்லை” என்றார்.
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago