Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம.ஏ.சுமந்திரன் ஆகியோரை விலக்கி கொள்வதுடன், அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டு பதவி விலக வேண்டுமென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.
யாழ் கே.கே.எஸ். விதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்த தந்தை செல்வநாயகமும் ,பொன்னம்பலமும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்ந்து செயற்பட்ட காலத்தில் இன்றைக்கு கூட்டமைப்பின் தலைவராக இருக்கக் கூடிய சம்பந்தனோ, சேனாதிராஜாவோ தமிழரசுக் கட்சியில் கூட இருக்கவில்லையெனவும் கூட்டங்களைக் கூட தூர நின்று தான் வேடிக்கை பார்த்திருப்பார்களெனவும் குற்றஞ்சாட்டினார்.
இப்படிப்பட்ட மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனும் எதிரிகளாக இருந்த போது தன்னிடம் பதவிகளைக் கோரினரெனத் தெரிவித்த அவர், அதன்போது கட்சி உடையக் கூடாதென்பதற்காக தான் தான் மாவை சேனாதிராஜாவை எம்.பி ஆக்கியதாகவும் அதனாலேயே சம்பந்தனுக்கு தன் மீது கோபம் வந்ததாகவும் கூறினார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வநாயகம், அதனை அமிர்தலிங்கத்திடம் கொடுத்து விட்ட பின்னர், 28 வருட பின்னரே திருட்டுத்திறப்பை போட்டு திறந்தவர் தான் மாவை சேனாதிராஜா, இதற்கு சம்பந்தனும் உடந்தையாக இருந்தார்.
அவ்வாறு திருட்டுத்தனமாகத் திறப்பைப் போட்டுத் திறந்த மாவை சேனாதிராஜா, அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்கத் தகுதியற்ற நிலையில் எவ்வாறு கட்சித் தலைவராக இருக்க முடியும் என, மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
7 hours ago
13 Jul 2025