2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகடிவதை தொடர்பில் தாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

தனக்குக் கிடைத்த அறிக்கையின் படி, பல்கலைக்கழக நிர்வாகத்தால் பகடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென்று தெரிவித்த ஆளுநர், இதற்கமைய, பல்கலைக்கழக நிர்வாகத்தினரை தான் சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X