2025 ஜூலை 23, புதன்கிழமை

சர்வதேச புலம்பெயர் தினம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா  

'சர்வதேச புலம்பெயர் மக்கள் தினமான இன்று (18) வெள்ளிக்கிழமை, எமது கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் சுபீட்சம் பெற, எமது புலம்பெயர் மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம்' என இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம ஏற்பாட்டாளர் றகீப் ஜௌபர் இன்று (18) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

'1990  ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாள் இன்று 25   வருடங்களை சந்தித்துள்ளது. இந்த முக்கியத்துவம்மிக்க நாளில்,  ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்துக்கு இணங்க, புலம்பெயர் தொழிலாளர்களினதும் அவர்களுடைய குடும்பங்களினதும் உரிமையும் பாதுகாப்பும் மேம்;படுத்தப்பட்டு,  பிரகடனத்தில் இருக்கின்ற அனைத்து அம்சங்களையும் எமது அரசாங்கங்கள் அமுல்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்த  உறுதி பூணுவோம்.

மேலும், கடல் கடந்து உறவுகளை பிரிந்து சென்று, தனது குடும்பததுக்கான பயணத்தில் உயிர்நீத்த மற்றும் இன்னலுறுகின்ற எமது தொளிலாளர்கள் அனைவரையும் ஒரு கணம் நினைவு கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்திப்போம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .