2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியது

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்று (05) காலை இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம்  கரையொதுங்கியது.

தமிழகத்தின் ஆலம்பத்தூர் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் (வயது 47)  என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரமே இவ்வாறு கரையொதுங்கிய நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.

 வட பகுதிக் கடலில் ஆறு நாள்களுக்குள் இனந்தெரியாத 6 சடலங்கள் கரையொதுங்கின.

நவம்பர் மாதம் 27ஆம் திகதி வடமராட்சி கிழக்கு மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும், மறுநாள் நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், 30ஆம் திகதியன்று   வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும், கடந்த வியாழக்கிழமை (02) பருத்தித்துறை சாக்கோட்டை மற்றும் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியிலுமாக இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கின.

குறித்த 06 சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே மேற்படி சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .