2025 மே 01, வியாழக்கிழமை

சாவகச்சேரி சம்பவம்; வடமாகாண வைத்தியர்கள் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2024 ஜூலை 08 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர். 

வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக  தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின்  பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட  அச்சுறுத்தலுக்கு எதிராகவும,  

அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும, 

பாதிக்கப்பட்டுள்ள  வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர். 

எனவே, இதன் பிரகாரம் இன்று காலை 8 மணியிலிருந்து, மறுநாள் காலை 8 மணி வரை வைத்தியர்கள்  உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .