Editorial / 2018 ஏப்ரல் 05 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
யாழ் சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
31 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி 4 உறுப்பினர்களையும்; சிறிலங்கா சுதந்திர கட்சி 3 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி 2 உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணி 2 உறுப்பினர்களையும் சுயேட்சைக்குழு 1 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு, வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (05) காலை இடம்பெற்றது
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் க.வாமதேவன் பிரேரிக்கப்பட்டதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் க.சதீஸ்வரன் தவிசாளர் வேட்பாளராக பிரேரிக்கப்பட்டார்.
பகிரங்கமாக இடம்பெற்ற தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட க.வாமதேவன் 23 வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் 6 வாக்குகளை பெற்றார்.
இதைத்தொடர்ந்து இடம்மெற்ற உப தவிசாளர் தெரிவின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் செ.மயூரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago