2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘சி.வி விலகுவதை தெற்கு தலைவர்கள் தீர்மானிக்க முடியாது’

Editorial   / 2018 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் ஒதுங்க வேண்டும் என ஜாதிக கேல  உறுமய தெரிவித்த கருத்து தொடர்பாக வினவிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சம்பிக்க ரணவக்க மிகவும் தனது இனவெறி தனத்தை பிரதிபலிப்பத்து வருகிறாரெனத் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முதலமைச்சர்  அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதா, இல்லையா என்பதை விக்கினேஸ்வரனே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

 

அவரை பிரதிநிதியாக நியமிப்பதா, இல்லையா என்பதை வட பகுதி மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக தெற்கில் உள்ள தலைவர்கள் எவரும் தீர்மானிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “நீங்கள், இராணுவ வீரர்களுக்கு வைக்கின்ற நினைவுச் சின்னங்களே விடுதலைப் புலிகளது வீர வரலாற்றை பறைசாற்றும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு உங்கள் இராணுவம் கொல்லப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் அதில் எமது போராட்ட வரலாறும் கூறப்பட வேண்டும் என்பதை மறந்து வீடாதீர்கள்” என்றார்.

அத்துடன், “பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆளும் இனம், நாங்கள் ஆளப்படும் இனம் என்ற சிந்தனை இருக்கும் வரை, நிரந்தர அரசியல் தீர்வோ, நல்லிணக்கமோ ஏற்படாது” என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .