2025 மே 21, புதன்கிழமை

சிறந்த பொலிஸ் சேவையால் ‘வடக்கு மக்களுக்கு நல்லதோர் எதிர்காலம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

சிறந்த பொலிஸ் சேவை மூலம், வடக்கு மக்களுக்கு நல்லதோர் எதிர்காலம் அமையும் என தான் நம்புவதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தென்னஞ்சோலை மரநடுகை நிகழ்வு, வவுனியா - பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வளாகத்தில், நேற்று (04) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நிரந்தர சமாதானம், நல்லிணக்கதுக்கு பொலிஸ் சேவை மிகவும் அவசியமெனக் குறிப்பிட்ட அவர், “கிராமத்ததுக்கு பொலிஸ்” என்ற நடமாடும் சேவை மூலம், 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள், வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ளனவெனவும் தெரிவித்தார்.

அவை, நாட்டின் அபிருத்திக்காக பொலிஸாரின் பங்களிப்பாக இருக்கின்றனவெனவும், இவ்வேலைத்திட்டம் மூலம் வடக்கு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சிறந்த உறவு ஏற்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் காணப்படும் குற்றச் செயல்கள், போதைப்பொருள், சிறுவர் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் குறைப்பதற்கு, சமூகத்தின் ஒத்துழைப்பு, பொலிஸாருக்குத் தேவையென, அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த செயற்றிட்டம் மூலம், வவுனியாவில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளிலும் 110 தென்னை மரங்கள் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .