2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களை பாதுகாத்தல்: அதிபர்களுக்கு செயலமர்வு

Freelancer   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. தமிழ்ச்செல்வன்

சிறுவர் உரிமைகள், உடல் ரீதியான தண்டனையிலிருந்து சிறுவர்களை பாதுகாத்தல் எனும் தலைப்பில்  கிளிநொச்சி தெற்கு, வடக்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த  அதிபர்களுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தல் செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு வலயங்களை சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு இச் செயலமர்வு நேற்று (12) கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் நடத்தப்பட்டது.

இதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், விரிவுரையாற்றினார். 

அத்துடன் கிளிநொச்சி வடக்கு, தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள், கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர். ஆணைக்குழுவின் அலுவலர்களும் கருத்துக்களை வழங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X