2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறைச்சாலை நூலகம் யாழில் திறந்துவைப்பு

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

              செந்தூரன் பிரதீபன்

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று   சனிக்கிழமை (08) காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால்  திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் அண்மைக் காலமாக ஈடுபாட்டு வருகின்ற நிலையில்  பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஒரு அம்சமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான 2,500 புத்தகங்களை கொண்ட நூலகம் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால்  திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பிரதேச செயலர் சுதர்சன்,யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார,யாழ் சிறைச்சாலை ஜெயிலர் கெரத்,யாழ் பல்கலைக்கழக உதவி நூலகர்கள்,யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்,சிறைச்சாலை மருத்துவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ,கைதிகள் என பலரும் கலந்து கொண்டன்ர.

இந்நூலகத்திற்கு  தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                                                            

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .