2025 மே 21, புதன்கிழமை

சிவசேனை அமைப்பின் தலைவருக்கு TID ஆல் விசாரணைக்கு அழைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, கொழும்புக்கு நாளை மறுதினம் (18) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை தொடர்பான தகவல்கள், பதிவு தொடர்பான ஆதாரங்கள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், சச்சிதானந்தனுக்கு இன்று (16) கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X