Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும், "நமது ஈழநாடு" பத்திரிகையின் பணிப்பாளருமான சி.சிவமகாரஜாவின் 16ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (20) நடைபெற்றது.
முன்னதாக தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்திலுள்ள சி.சிவமகாரஜாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் உமாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சி.சிவமகாராஜா, 2006 ஓகஸ்ட் 20ஆம் திகதி, தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
24 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
37 minute ago