2025 மே 17, சனிக்கிழமை

சிவரூபனை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால் பளை வைத்தியசாலைக்கு முன்னால், இன்று (20) முற்பகல் 9 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர் சிவரூபனின் கைதையடுத்து, இன்று (20) மாதாந்த சிகிச்சைக்காக வருகைதந்த மக்கள் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்த நிலையிலேயே, பளை வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், சிகிச்சைக்காக வருகை தந்த மக்களால், குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட வைத்தியரை விடுதலை செய்யமாறும், கைதான வைத்தியரின் வெ்றிடத்துக்கு தற்காலிகமாக வைத்தியர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்குமாறு கோரியுமே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .