2025 மே 19, திங்கட்கிழமை

சிவாஜிலிங்கம் விடுவிப்பு

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாட முயன்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், விடுவிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றாரெனக் குற்றஞ்சாட்டி, வல்வெட்டித்துறை பொலிஸாரால், இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அதன்போது, அவர் வசமிருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து, மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாகக் கூறி, சிவாஜிலிங்கத்தை பொலிஸார் விடுவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X