2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சுகாதார பிரிவினரில் ஒரு பகுதியினருக்கு பெற்றோல் இல்லை

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமாக மாஞ்சோலை பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் காணப்படுகின்றது.

அரசின் அறிவிப்புக்கு அமைய மாவட்டத்தில்  பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கான  பெற்றோல் வழங்கும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா,துணுக்காய்,மாந்தை கிழக்கு,மல்லாவி, ஒட்டுசுட்டான் போன்ற தூர பிரதேசங்களில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளாரின் ஒழுங்கு படுத்தலில் பரல்களில் நிரப்பப்பட்டு இராணுவ பாதுகாப்புடன் அந்த அந்த பிராந்திய சுகாதார பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மாலை 6.00 மணியான நிலையில் 6,600 லீற்றர் பெற்றோலும் முடிவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை  ஏற்பட்டது. சில சுகாதார உத்தியோகத்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்ப்பட்டது

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் ஆயுள்வேத மருத்துவமனை வைத்தியர்கள்,ஊழியர்கள்களுக்கு எவருக்குமே  பெற்றோல் வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட ஆயுள்வேத  மருத்துவமனைகளின் ஊழியர்கள் மருத்துவர்கள்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை வைத்துக்கொண்டு தமக்கு  எரிபொருளை வழங்கவில்லை எனவும் அளந்து காண்பிக்குமாறும் கோரியதோடு  விலைக்கட்டுப்பாட்டு பிரிவினரையும் தொடர்பு கொண்டனர்.

இருப்பினும் விடுமுறை நாள் என்பதால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிற்பதால் அங்கு வரக்கூடிய நிலையில் இல்லை என தெரிவிக்கப்படட நிலையில் கடமையில் நின்ற விமானப்படையினரிடம் தங்கள் நிலமையினை எடுத்துக்கூறிய நிலையில் அங்கு பெற்றோல் இல்லை எனவும்   அவர்களுக்கு லங்காக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள ஆவண செய்வதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் நீண்ட நேரம் காத்திருந்தும் சுகாதார பிரிவினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார்கள்.

இதேவேளை ஆயுள்வேத  மருத்துவமனைகளின் ஊழியர்கள் மருத்துவர்கள் எரிபொருள் வழங்கலில் புறக்கணிக்கப்பட்ட சம்பவத்துக்கு அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  தலைவர் கட்டுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .